காசியை விட வீசம் மேன்மை பெற்ற ஸ்தலமும், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், ஐயடிகள், காடவர்கோன் நாயனார், இல்லையே என்னாத இயற்பகை நாயனார், உபேந்திரனால் பூஜை செய்யப்பட ஸ்ரீ வில்லேந்திய வேலர் ஆகிய அருளாளர்கள் போற்றித் துதித்த ஸ்ரீ குயிலினும் இன்மொழி அம்பிகா சமேத ஸ்ரீ ரத்னசாயாவநேச்வர சுவாமிக்கு நிகழும் தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை ருத்ராபிஷேகம் நடைபெற்றது.
ஹோமம், அபிஷேக ஆராதனை, பஞ்சமுக அர்ச்சனை, ஸ்ரீவில்லேந்திய வேலவருக்கு சத்ருசம்ஹார அர்ச்சனை, ஸ்ரீகோஷாம்பிகைக்கு சந்தன அலங்காரம், லலிதா திரிசதையும் சிறப்புற நடத்தப்பெற்றது. பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். அபிஷேக ஆராதனையின் முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.