அன்பும் அறனும் உடைத்தாயின் பண்பும் பயனும் அது. உலகமே மகிழ்ந்து கொண்டாடும் இவ்வேளையில் உரிமைகள் இழந்தோரெல்லாம் உரிமைகள் பெறட்டும். உறவுகளைப் பிரிந்தோரெல்லாம் ஒன்றுகூடட்டும். சமதர்ம சிந்தனைகள் செழித்து வளரட்டும். மதங்கள் கலந்த மனிதகுலம் அதனை மறந்து போகட்டும். சாதீ'கள் அணைக்கப்படட்டும். இந்தியராய் பிறந்தோருக்கெல்லாம் வல்லரசு வேண்டாம், நல்லரசு வேண்டும் என்ற எண்ணம் ஓங்கட்டும். சொர்க்கத்தையே எழுதித் தருகிறேன் என்றாலும் மாற்றானிடம் சோரம் போகா நெஞ்சம், உரியவர்கள் கொள்ளட்டும். அதிகார துஷ்பிரயோகமெல்லாம் தகர்ந்து போகட்டும். அண்ணன் தம்பியராய் இந்தியர் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகளாய் சேர்ந்து வாழட்டும். கனவுகள் நியாயமெனில் வெற்றி கொள்ளட்டும். ஏழைகள் வாழ்விலும் ஏற்றம் பெருகட்டும். எந்தை தமிழ்த்தாயின் அனைத்து சிறப்புகளையும் உலகமே போற்றட்டும்.