Thursday, December 15, 2011

நோக்கம்


ஓம் நமசிவாய!
அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!
தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்சோதி!
சீர்காழி தாலுக்கா, பூம்புகார் அருகாமை சாயாவனம் எனும் ஊரில் சுயம்பு மூர்த்தியாய் விளங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஸ்ரீ குயிலினும் இன்மொழி அம்பிகை சமேத ஸ்ரீ ரெத்தினசாயாவனேஸ்வரர் ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் ஆலயம் சார்ந்த செய்திகள் இவ்வுலகில் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதே இந்த புளோகை உருவாக்கிய எங்களின் நோக்கம்.

59 ஆம் ஆண்டு ருத்ராபிஷேக விழா



Sunday, November 6, 2011

நோக்கம்

ஓம் நமசிவாய!
அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!
தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்சோதி!
சீர்காழி தாலுக்கா, பூம்புகார் அருகாமை சாயாவனம் எனும் ஊரில் சுயம்பு மூர்த்தியாய் விளங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஸ்ரீ குயிலினும் இன்மொழி அம்பிகை சமேத ஸ்ரீ ரெத்தினசாயாவனேஸ்வரர் ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் ஆலயம் சார்ந்த செய்திகள் இவ்வுலகில் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதே இந்த புளோகை உருவாக்கிய எங்களின் நோக்கம்.

கந்த சஷ்டி விழா

கடந்த 26/10/2011 முதல் 01/11/2011 வரை, அருள்மிகு சாயாவனேஸ்வரர் திருக்கோயிலில் அருள்மிகு வில்லேந்திய வேலவருக்கு கந்த சஷ்டி பூஜைகள் நடைபெற்றன. 01/11/2011 அன்று மதிய அளவில் அருள்மிகு வில்லேந்திய வேலவருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. ஸ்ரீ செந்தில் ஆண்டவராகிய வில்லேந்திய வேலவருக்கு செய்யப்பட்டிருந்த அலங்காரத்தினையும், மாலையில் நடைபெற்ற திருக்கல்யாண வைபோகத்தையும் கண்டு எல்லாம் வல்ல கலியுக தெய்வமாய் விளங்கும் சாயாவனத்திலிருந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ செந்தில் ஆண்டவரின் திருவருள் பெறுவோமாக! 








 

Friday, February 18, 2011

ருத்ராபிஷேக விழா

காசியை விட வீசம் மேன்மை பெற்ற ஸ்தலமும், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், ஐயடிகள், காடவர்கோன் நாயனார், இல்லையே என்னாத இயற்பகை நாயனார், உபேந்திரனால் பூஜை செய்யப்பட ஸ்ரீ வில்லேந்திய வேலர் ஆகிய அருளாளர்கள் போற்றித் துதித்த   ஸ்ரீ குயிலினும்    இன்மொழி அம்பிகா சமேத ஸ்ரீ ரத்னசாயாவநேச்வர சுவாமிக்கு நிகழும் தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை ருத்ராபிஷேகம் நடைபெற்றது. 

ஹோமம், அபிஷேக ஆராதனை, பஞ்சமுக அர்ச்சனை, ஸ்ரீவில்லேந்திய வேலவருக்கு சத்ருசம்ஹார அர்ச்சனை, ஸ்ரீகோஷாம்பிகைக்கு சந்தன அலங்காரம், லலிதா திரிசதையும் சிறப்புற நடத்தப்பெற்றது. பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். அபிஷேக ஆராதனையின் முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

Sunday, January 2, 2011

Sirkali-Auditors

Mr.Sundararajan
Mobile: 9443877280


 


Advocates in Sirkali



K.Rajaraman B.A, B.L.,
Advocate-Notary Public
Commissioner of Oaths
23, Sattanathar Colony (Opp: Munsif Court),
Sirkali - 609110
Tel: 04364 - 270250
Mobile: 94435 74140