Sunday, November 6, 2011

நோக்கம்

ஓம் நமசிவாய!
அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!
தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்சோதி!
சீர்காழி தாலுக்கா, பூம்புகார் அருகாமை சாயாவனம் எனும் ஊரில் சுயம்பு மூர்த்தியாய் விளங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஸ்ரீ குயிலினும் இன்மொழி அம்பிகை சமேத ஸ்ரீ ரெத்தினசாயாவனேஸ்வரர் ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் ஆலயம் சார்ந்த செய்திகள் இவ்வுலகில் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதே இந்த புளோகை உருவாக்கிய எங்களின் நோக்கம்.

கந்த சஷ்டி விழா

கடந்த 26/10/2011 முதல் 01/11/2011 வரை, அருள்மிகு சாயாவனேஸ்வரர் திருக்கோயிலில் அருள்மிகு வில்லேந்திய வேலவருக்கு கந்த சஷ்டி பூஜைகள் நடைபெற்றன. 01/11/2011 அன்று மதிய அளவில் அருள்மிகு வில்லேந்திய வேலவருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. ஸ்ரீ செந்தில் ஆண்டவராகிய வில்லேந்திய வேலவருக்கு செய்யப்பட்டிருந்த அலங்காரத்தினையும், மாலையில் நடைபெற்ற திருக்கல்யாண வைபோகத்தையும் கண்டு எல்லாம் வல்ல கலியுக தெய்வமாய் விளங்கும் சாயாவனத்திலிருந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ செந்தில் ஆண்டவரின் திருவருள் பெறுவோமாக!